ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மலிவான விலை போன் மற்றும் ரீசார்ஜ் திட்டம்! வேர லெவல் போங்க

Jio Diwali Low Price Mobile: இந்த தீபாவளிக்கு, நாட்டின் முன்னனி  நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, Jio Bharat 4G தொலைபேசியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த தீபாவளிவளிக்கு ஜியோ நிறுவனம்  ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

999 ரூபாய்க்கு விற்கும் Jio Bharat மொபைல் போன் இப்போது சந்தையில் 699 ரூபாய் சிறப்பு விலையில் கிடைக்கிறது. ஜியோபாரத் ஃபோனை ரூ.123க்கு ரீசார்ஜ் செய்யலாம். இந்த ஃபோனை நிறுவனம் 30 சதவீத தள்ளுபடியுடன் வரையறுக்கப்பட்ட கால சலுகையுடன் வழங்குகிறது.

Jio Diwali Low Price Mobile
Jio Diwali Low Price Mobile

தீபாவளி சிறப்புச் சலுகையுடன், ரூ.999 விலையுள்ள ஜியோபாரத் மொபைல் போன் இப்போது சந்தையில் ரூ.699 சிறப்பு விலையில் கிடைக்கிறது. ஜியோபாரத் ஃபோனை ரூ.123க்கு ரீசார்ஜ் செய்யலாம். மாதாந்திர ரீசார்ஜ் ரூ.123ல், வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளுடன் 14 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

ஏர்டெல் மற்றும் வோடஃபோனை விட மலிவான ரீசார்ஜ்

ஜியோவின் மாதாந்திர ரீசார்ஜ் திட்டமான ரூ.123 மற்ற ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட 40 சதவீதம் மலிவானது. இந்த ஃபோன் மூலம் 2ஜியில் இருந்து 4ஜிக்கு மாறுவதற்கான சிறந்த வாய்ப்பும் உள்ளது. 455 க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள், திரைப்பட பிரீமியர்கள் மற்றும் புதிய திரைப்படங்கள், வீடியோ ஷோக்கள், நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகள், ஜியோசினிமா சிறப்பம்சங்கள், டிஜிட்டல் பணம் செலுத்துதல், QR குறியீடு ஸ்கேன் போன்ற அம்சங்கள் Jio Bharat 4G ஃபோனில் கிடைக்கின்றன.

இந்த ஜியோ பாரத் மொபைலில்  Jio Pay மற்றும் Jio Chat போன்ற முன்பே ஏற்றப்பட்ட செயலிகளும் உள்ளது. இந்த போனை கடைகளிலும் வாங்கலாம். அதைத் தவிர, ஜியோமார்ட் அல்லது அமேசானிலிருந்து தொலைபேசியை வாங்கலாம்.

இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்கள் 

ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்களை அக்டோபர் 15 அன்று இந்திய மொபைல் காங்கிரஸில் அறிமுகப்படுத்தியது. 4ஜி ஃபீச்சர் போன் ஜியோ பாரத் சீரிஸின் கீழ் வி3 மற்றும் வி4 ஆகிய ஃபீச்சர் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிறுவனம் புதிய மாடல்களை ரூ.1099 விலையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

கடந்த ஆண்டு, ஜியோ பாரத் வி2 மாடலை அறிமுகப்படுத்திய ஜியோ, ஜியோபாரத் ஃபீச்சர் போன்கள் மூலம் மில்லியன் கணக்கான 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

Jio Diwali Low Price Mobile
Jio Diwali Low Price Mobile

V3 மற்றும் V4 இன் அம்சங்கள்

புதிய அடுத்த தலைமுறை 4G ஃபீச்சர் போன், சமீபத்திய வடிவமைப்பு, 1000 mAh சக்திவாய்ந்த பேட்டரி, 128 GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபீச்சர் போன் 23 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. ஜியோ பாரத் போனை மாதந்தோறும் வெறும் 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 14 ஜிபி டேட்டா வசதியை வழங்கும்.

For More Info:

Leave a Comment