TNPSC Group 4 Exam Result : டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தியது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. ரிசல்ட் பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:
TNPSC குரூப் 4 பதவிக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜுன் 9 ம் தேதி நடைபெற்றது.
இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்:
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்னதாக குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதற்கான அக்டோபர் மாத முதல் வாரத்தில் காலி பணியிடங்களுக்கான கணக்கெடுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தமாக டி.என்.பி.எஸ்.சி. காலிபணியிடங்கள் 8,932 என அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின் , இணையவழி மூலம் சான்றிதழ்பதிவேற்றம் செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
முன்னதாக, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளைபணியாளர் தேர்வாணையம் 50 நாட்களுக்குள் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது வரை அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பாப்போம்.
Result Link: